search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மொபட் மீது அரசு பஸ் மோதல்"

    பல்லடத்தில் சிக்னலில் நின்றபோது மொபட் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

    பல்லடம்:

    பல்லடம் பொங்கலூர் மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் வரதராஜ் (வயது 48). பலகார வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி (42). கணவன்- மனைவி இருவரும் கோவையில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்ல புறப்பட்டனர். அதன்படி வீட்டில் இருந்து மொபட்டில் பல்லடம் பஸ் நிலையம் வந்தனர். பஸ் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் மொபட்டை நிறுத்தினர்.

    கோவை உறவினர் வீட்டுக்கு வந்த தம்பதி உறவினர்களை பார்த்து விட்டு இரவு பல்லடம் திரும்பினர். பஸ் நிலையத்தில் நிறுத்திய மொபட்டை எடுத்துக் கொண்டு இருவரும் வீட்டுக்கு புறப்பட்டனர்.

    புறப்பட்ட சிறிது தூரத்தில் நால்ரோடு சிக்னல் உள்ளது. சிக்னலை கடக்கும் முன்பு சிவப்பு விளக்கு எரிந்தது. உடனே மொபட்டை வரதராஜ் நிறுத்தினார். அப்போது கோவையில் இருந்து கரூருக்கு அரசு பஸ் வந்தது. அப்போது அங்கு நின்ற மொபட் மீது பஸ் பின்னால் மோதியது. இதில் தம்பதி நிலைதடுமாறி விழுந்தனர். விழுந்து கிடந்த மகேஸ்வரி மீது பஸ்சின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் ரத்தவெள்ளத்தில் அவர் உயிருக்கு போராடினர். அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மகேஸ்வரிக்கு முதலுதவி சகிச்சை அளிக்கப்பட்டது.

    மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் காரணம்பேட்டை அருகே வந்தபோது மகேஸ்வரி பரிதாபமாக இறந்தார். லேசான காயங்களுடன் வரதராஜ் சிகிச்சை பெற்று வருகிறார். பலியான மகேஸ்வரிக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.விபத்து குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கிணத்துக்கடவு அருகே இன்று காலை மொபட் மீது அரசு பஸ் மோதி பெண் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

    கிணத்துக்கடவு:

    கோவை சுண்டக்கா முத்தூரை சேர்ந்தவர் வெங்கடாசலம் (55) கட்டிட தொழிலாளி. கோவை குளத்துப்பாளையத்தை சேர்ந்த ருக்மணி (40). சித்தாள். இவர்கள் இருவரும் இன்று காலை கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம் பாளையத்தில் கட்டிட வேலைக்கு மொபட்டில் சென்றனர். கோவை-பொள்ளாச்சி சாலையில் ஏழூர் பிரிவு பகுதியில் சென்று கொண்டு இருந்தனர்.

    அப்போது கோவையில் இருந்து பழனிக்கு அரசு பஸ் வந்தது. இந்த பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மொபட் மீது மோதியது. இதில் ருக்மணி பஸ் சக்கரத்தில் சிக்கினார். அவர் மீது சக்கரம் ஏறி இறங்கியது. அவர் சம்பவ இடத்திலே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    வெங்கடாசலம் படுகாயம் அடைந்தார். மொபட் மீது மோதிய பின்னரும் கட்டுக்குள் வராத பஸ் அந்த வழியாக மற்றொரு மொபட்டில் சென்ற செட்டிப்பாளையம் நேதாஜி நகரை சேர்ந்த ரவிக்குமார் (40), போத்தனூர் மாந்தோப்பு ரெயில்வே காலனி நாகராஜன் (46) ஆகியோர் மீது மோதியது. இதில் இருவரும் காயம் அடைந்தனர். இவர்களும் கட்டிட தொழிலாளர்கள் ஆவார்கள். வேலைக்கு சென்ற போது விபத்தில் சிக்கி கொண்டனர்.

    இது குறித்து கிணத்துக் கடவு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த வெங்கடாசலம், ரவிக்குமார், நாகராஜன் ஆகியோரை மீட்டுசிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான ருக்மணி உடல் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுப்பி வைக்கப்பட்டது.

    கிணத்துக்கடவு ஏழூர் பிரிவு பகுதியில் தனியார் பள்ளி உள்ளது. இப் பகுதியில் தொடர் விபத்து நடைபெற்று வருகிறது. இதனால் மாணவர்கள் பீதியில் உள்ளனர். எனவே விபத்தை தடுக்க அப் பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×